சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
IPL2024 : இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது
ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கியது குஜராத் அணி, தொடக்க வீரர்களான கில் மற்றும் சாஹா சொற்ப ரங்களில் அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன் பிறகு களத்தில் இருந்த தமிழக வீரர்களான சாய் சுதர்சனும், ஷாருக் கானும் அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருவரின் ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். பெங்களூரு அணியின் பலம் வாய்ந்த ஸ்பின்னர்களை ஷாருக் கான் நான்கு பக்கமும் போலந்து கட்டி அவுட்டும் ஆனார். அவருடன் கூட்டணி அமைத்த இளம் வீரர் சாய் சுதர்சன் ஒருகட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கினார். இதன் காரணமாக குஜராத் அணி இறுதியில் 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 பந்துக்கு 84* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து 201 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே தேவையான பவுண்டரிகளை குவித்து விராட் கோலி ஒரு பக்கம் உறுதுணையாக நிற்க, டூ ப்லெஸ்ஸியின் விக்கெட் போனவுடன் களமிறங்கிய வில் ஜாக்ஸ் அதிரடியின் உச்சத்தை குஜராத் அணிக்கு காட்டினார்.
பெங்களூரு அணிக்கு தூணாக நின்று விராட் கோலி ஒரு பக்கம் அரை சதம் விளாச, வில் ஜாக்ஸ் அவரது ஆக்ரோஷ அதிரடியில் அரை சதத்தை கடந்தார். அதிலும் குஜராத் அணியின் நட்சத்திர பவுலரான மோஹித் சர்மாவின் பந்தை வான வேடிக்கை காட்டினார். அவரது அதிரடியில் பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய வில் ஜாக்ஸ் வெறும் 41 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார் அதில் 10 சிக்ஸர்கள் மட்டும் அடங்கும், மேலும் விராட் கோலி 44 பந்துக்கு 77 ரன்கள் எடுத்திருந்தார்.