இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இங்கு அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி ஒரு நாள் போட்டி தொடங்குகிறது.கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருப்பதால், இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இலங்கைக்கு பிசிசிஐ அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தான் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது ” இந்தியாவின் 2ம் கட்ட கிரிக்கெட் அணி இங்குவந்திருப்பது நம் கிரிக்கெடுக்கு ஏற்பட்ட அவமானம். டெலிவிஷன் மார்க்கெட்டிங் தேவைகளுக்காக இப்படிப்பட்ட அணியுடன் விளையாட ஒப்புக் கொண்டதற்காக நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே வன்மையாக கண்டிக்கிறேன். இங்கிலாந்துக்கு சிறந்த அணியைஅனுப்பி விட்டு பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கு நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே நான் சாடுவேன்”. என்று தெரிவித்துள்ளார்.
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…