13 ஆம் ஐபிஎல் டி-20 போட்டி, இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது. இதனைதொடர்ந்து, மார்ச் 29ல் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா-தென்னாபிரிக்கா இடையான போட்டிகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ரத்து செய்தது. மேலும், ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதியையும் தாண்டி தள்ளிப்போகும் என தகவல் வெளியாகின.
மேலும் இதுகுறித்து சவுரவ் கங்குலி, இந்தாண்டு போட்டிகளை குறைத்து ஐபிஎல் தொடர் நடக்கும் என தெரிவித்தார். ஆனால், போட்டிகளை குறைக்க ஐபிஎல் நிர்வாகத்தினர் முன்வரவில்லை என கூறிவந்தனர். மொத்தமாக 60 போட்டிகளையும் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2009ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள், 47 நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதேபோலவே, கொரோனா வைரஸின் தாக்கத்தை பொறுத்ததே இந்தாண்டு ஐபிஎல்-லின் பாதி போட்டிகள் இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிலும் நடக்கும். அப்படி இல்லையெலில், அனைத்து போட்டிகளும் வெளிநாட்டில் நடத்தப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…