இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாம் டி20 இன்று ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூரில் வைத்து இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த வியாழன் அன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்சின் சிங்கக்குட்டி ஆன சிவம் துபே ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2சிக்ஸருடன் 40 பந்துக்கு 60 ரன்கள் விளாசினார். அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அன்றைய போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தா விட்டாலும் நன்றாகவே அமைந்தது. அதே போல இன்று நடக்கும் போட்டியிலும் இதை விட சிறப்பாக செயல்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்ற போட்டியில் விராட் கோலி ஆடவில்லை என்பது நமக்கு தெரிந்ததே. ஆகயால் இன்று விளையாடும் போட்டியில் அவர் விளையாடுவர் என தகவல் வந்துள்ளது இதனால் 429 நாட்களுக்கு பிறகு விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளார். ஆகயால் இன்று அணியில் சில மாற்றங்கள் நிலவும். அதனால் யார் யார் இன்று அணியில் இடம் பெறுவார்கள் என இரவு 7 அணி வரை நாம் காத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணி வென்று விட்டால் இந்த தொடரை 2-0 என கைப்பற்றும். மாறாக தோல்வி கண்டு 1-1 என்று ஆப்கானிஸ்தான் தொடரை சமன் செய்தால் வருகிற 17 ம் தேதி நடக்கும் தொடரின் கடைசி போட்டியில் யார் தொடரை கைப்பற்றுவார் என்பது முடிவாகும். இதன்பிறகு இந்திய அணிக்கு எந்த ஒரு டி20 தொடரும் கிடையாது. அவர்கள் நேராக டி20 உலக கோப்பையில் தான் விளையாடுவார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…