இலங்கையை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்தியா..!
நாளை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையில் 2-வது டி20 நடைபெறுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.