இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆம் டி-20 போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனைதொடர்ந்து 4 ஆம் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளை வைத்து பார்த்தால் 2 ஆம் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங், சற்று சொதப்பலாக உள்ளது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல், விக்கெட்களை வாரி வழங்குகிறது. மேலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் டக் அவுட் ஆகினார்.
மிடில் ஆடரை பொறுத்தளவில் இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதில் சூர்யகுமார்யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் பந்துவீச்சில் சர்துல் தாக்கூருக்கு பதில் தீபக் சாகர் அல்லது நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…