மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?
19 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று மோதுகிற
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நடப்பு சாம்பியன் இந்திய அணி எதிர்கொள்கிறது.
முன்னதாக, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இதில், இந்திய மகளிர் அணிக்கு சாம்பியன் ஆவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. அப்படி ஒருவேளை நடந்தால் இரண்டு முறை சாம்பியனாவதற்கு வாய்ப்பு உள்ளது.
எதிர்பார்க்கப்படும் வீரர்களின் பட்டியல்….
இந்திய அணி:
நிக்கி பிரசாத் தலைமையிலான அணியில் ஜி கமலினி, கோங்காடி த்ரிஷா, சனிகா சால்கே, ஈஸ்வரி அவ்சரே, மிதிலா வினோத், ஆயுஷி சுக்லா, ஜோஷிதா VJ, ஷப்னம் MD ஷகீல், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி கே ஷர்மா, பாவிகா அஹிரே, ஆனந்திதா கிஷோர், சோனம் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணி:
கெய்லா ரெய்னேக் தலைமையிலான அணியில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ், ஃபே கோவ்லிங், கராபோ மாசியோ , மைக் வான் வூர்ஸ்ட், செஷ்னி நைடூ, லுயாண்டா நசுசா, ஆஷ்லே வான் வைக், மோனாலிசா லெகோடி, ந்தபிசெங் நிலானி, டியர்ராங் நிலானி ஆகியோர் உள்ளனர்.