INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதுகிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுவதற்கு காரணமே, 2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? என்பது தான்.
ஏனென்றால், 2011 உலகக்கோப்பை காலிறுதியை அடுத்து இந்திய அணி ஐசிசி நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் 2 முறை தோல்வி கண்டுள்ளது. இன்றைய நாள் ஆட்டத்தில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாட களமிறங்கியுள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற அணி ஆஸ்ரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்ரேலியா : கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா
இந்தியா : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
இரு அணிகளுக்கும் ஐஐசி கோப்பை போட்டிகளில் நாக் அவுட் வெற்றி -தோல்வி கணக்கீடு என பார்த்தல் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால், அந்த 4 போட்டிகளும் 1998, 2000, 2007, 2011 ஆகும். 2011 காலிறுதி போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 2015 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் 2023 உலகக்கோப்பை இறுதி போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தோல்விகளுக்குயெல்லாம் சேர்த்து இந்த போட்டியில் பதிலடி கொடுக்குமா இந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025