முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஹைதராபாத்.? இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை.!
இன்றயை ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் – லக்னோ அணிகள் மோதல்.
ஐபிஎல் 2023-யின் 10-வது லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் – லக்னோ அணிகள் மோதுகிறது. லக்னோ அணி இந்த சீசன் 2 போட்டியில் விளையாடி டெல்லியுடன் 1 போட்டியில் வெற்றிபெற்றது.
தற்போது புள்ளி விவர பட்டியலில் லக்னோ அணி 5-வது இடத்தில உள்ளது. அதைப்போல ஹைதராபாத் அணி 1 போட்டியில் விளையாடி அந்த போட்டியிலும் படு தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
மேலும் இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 1 போட்டியில் மோதியுள்ளது. அதில் லக்னோ அணி தான் வெற்றிபெற்றது. எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.