ஐபிஎல் 2024 : இன்று மதியம் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
இந்த சீசனின் 12-வது ஐபிஎல் போட்டியாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணிக்காக எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி 277 ரன்கள் அடித்து போட்டியில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரியான ஃபார்மில் இருக்கிறது. எனவே நாளை நடைபெறும் போட்டியில் அந்த அணி எவ்வளவு அதிரடியாக விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது. அதே போல குஜராத் அணியும் கடந்த போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியடைந்து வருகிறது.
நேருக்கு நேர்
இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 2 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்று நேருக்கு நேர் வெற்றியை சமன் செய்யும் முனைப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களம் காண்கிறது.
குஜராத் அணி
சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.
ஹைதராபாத் அணி வீரர்கள் :
மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…