சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்த பிறகு தனது ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.

rohit sharma retirement

துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தீயாக பரவியது. அதன்பிறகு ஓய்வு பெறுவதற்கு இப்போது எண்ணமில்லை..ஓய்வு என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்..நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன்” எனவும் பேசி விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும் அந்த தகவல் ஓய்ந்தபாடு இல்லை. ஏனென்றால், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்த பிறகு தனது ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஓய்வு பெற இப்போது விரும்பவில்லை என ரோஹித் சர்மா அப்படி கூறினாலும் கூட 2027-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி இருக்கிறது.

எனவே, அதற்குள் ஓய்வு குறித்த விஷயங்களை கூறினால் தான் அடுத்ததாக எந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்ய முடியும் என்பதால் ரோஹித் ஷர்மாவிடம் இது குறித்து பிசிசிஐ பேசியிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டி வரை ரோஹித் ஷர்மாவின் முடிவு குறித்து அவர் அறிவித்தால் அடுத்த நடவடிக்கையை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கேப்டனை ஒப்பந்தம் செய்வது குறித்து தற்காலிகமாக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ரோஹித் இன்னும் ஓய்வு பெறுவது குறித்து சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்பதால் முடிவு குறித்து பிசிசிஐ கேட்டதற்கு தெளிவான பதிலும் சொல்லவில்லை என்ற காரணத்தால் பிசிசிஐ  அவருடைய பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடைய முடிவு என்னவாக இருந்தாலும் பிசிசிஐ அதற்கு ஆதரவு அளித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. உண்மையில் ரோஹித் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்