INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! 100-வது டெஸ்டில் சாதனை படைப்பாரா ..?

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது சர்வேதேச போட்டியாகும். இந்த போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதற்கு மிக முக்கிய கரணம் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களே ஆவார்கள். அஸ்வின் மட்டும் குலதீப் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை சுருட்டினார்கள்.

Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!

அதிலும், அஸ்வின் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டை எடுத்திருந்தார். தற்போது, இன்றைய 3-வது ஆட்டத்தின் முதல் செஷனில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அஸ்வின் தனது சூழலால் களத்திற்கு வந்த வேகத்தில் பெவிலியன் அனுப்பி வைத்தார். இதனால், முதல் செஷனிலேயே 4 விக்கெட்டுகளை அவர் காப்பாற்றினார்.

இதனால், இங்கிலாந்து அணி 117-6 என தடுமாறி வருகிறது. இந்த 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் எடுத்து ஒரு டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுளை கைப்பற்றி உள்ளார். தற்போது, விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் மீதம் உள்ள 4 விக்கெட்டுகளில் 1 விக்கெட்டை எடுத்தால் 100வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த பெருமையும், சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின்படைப்பார்.

Read More :- INDvsENG : அடேங்கப்பா .. 700 விக்கெட்டா ..! ஆண்டர்சன் படைத்த புதிய சாதனை ..!

இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இதே போல விளையாடி 9 விக்கெட்டுகளையே கைப்பற்றி இருந்தார். தற்போது, இந்திய அணியின் அஸ்வினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் சிறப்பாக பயன்ப்படுத்தி  இந்த சாதனையை படைப்பாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்