கேப்டனாக புதிய சாதனையை படைப்பாரா தல தோனி..?
இன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி கேட்ச்கள் பிடித்தால் கேப்டனாக அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி செய்த சாதனைகள் சொல்லவே தேவையில்லை, ஐபிஎல் தொடர்களில் அதிகம் போட்டிகள் விளையாடி வீரர் என்ற சாதனை வைத்துள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் விளையாடி 102 ரன்கள் அடித்துள்ளார்.
மொத்தமாக இதுவரை 196 போட்டிகள் விளையாடி 4534 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 213 சிக்ஸர்கள் விளாசி, ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் மோத உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் தோனி இரண்டு கேட்ச்கள் பிடித்தால் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.
மேலும் கேப்டனாக எந்த ஒரு வீரரும் செய்யாத இந்த சாதனையை தோனி படைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள். அதைபோல் 6 சிக்ஸர்கள் அடித்தால் அதிகம் சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடுவார்.