GTvsDC [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.
இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த போட்டியில் இது வரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 9-தாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6-வதாக இருக்கும் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
மேலும், இந்த் தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று டெல்லி அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அதே நேரம் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில்லும் மிகசிறந்த ஆட்டத்தையே இந்த தொடரில் வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் அஹமதாபாத் மைதானத்தில் ரன்ஸ் மழைக்கும் பஞ்சம் இருக்காது எனவும் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அணிகளும் தலா 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அகில் 2 முறை குஜராத் டைட்டன்ஸ் அணியும், 1 முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதை சமன் செய்ய டெல்லி அணி வீரர்கள் கடுமையாக போட்டி இடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா
டெல்லி அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அபிஷேக் போரல், ரிஷப் பந்த்(கேப்டன் /விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…