ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது.
நடந்து கொண்டிற்கும் 17-வது ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் மோதுகிறது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்று தற்போது இந்த போட்டியில் மோதவுள்ளது.
டெல்லி அணி தனது கடைசி போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்டு விளையாடியது, வலுவான சென்னை அணியை டெல்லில் அணி எதிர்கொண்டு 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கொல்கத்தா அணியும் இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் எந்த அணி வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. மேலும், இந்த இரண்டு அணிகளிலும் அடித்து விளையாட கூடிய வீரர்கள் இருப்பதால் மைதானத்தில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 32 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 16 முறை கொல்கத்தா அணியும், 15 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாமல் இருக்கிறது. நேருக்கு நேரில் கிட்ட தட்ட சமமாக இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டெல்லி அணி வீரர்கள்
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
கொல்கத்தா அணி வீரர்கள்
வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (வாரம்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…