ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 30 ஆம் போட்டியான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களமிறங்கவுள்ளது. இந்த போட்டி, டதுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ராஜஸ்தான் அணிக்கு பெண் ஸ்டோக்ஸ் களமிறங்கியது, பேட்டிங்கில் பெரிய பலமாக அமைந்தது. ஆனால் டெல்லி அணியில் காயம் காரணமாக அமித் மிஸ்ரா வெளியேறினார்.
இந்தநிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இந்த இரு அணிகளும் 21 முறைகள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் டெல்லி அணி 9 முறையும், ராஜஸ்தான் அணி 11 முறையும் வென்றுள்ளது.
மேலும் ராஜஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடினால் முன்னேற வாய்ப்புள்ளது. அதேபோல புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெரும் நோக்குடன் டெல்லி அணி களமிறங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…