ஐபிஎல் தொடரின் 29 ஆம் போட்டியான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 29 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை அணியில் தாய் மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியது. அதில் ஹைதராபாத் அணி 3 போட்டிகளிழும், சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் புல்லிபட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல் போட்டியிலே நன்றாக ஆடிவந்த ஜெகதீசன், தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அவரைதொடர்ந்து அணியின் அதிரடி வீரர் டு-ப்ளசிஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…