தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?
தோனி தற்போது சிஎஸ்கே அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தோனி தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அணி தற்போது ஐபிஎல் 2025 சீசனில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலில் கீழே உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு சென்னை தீவிரமாக முயற்சிக்கும்.
குறிப்பாக, கடைசியாக சேப்பாக்கத்தில் டெல்லி அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது, 15 ஆண்டுகளில் டெல்லி அணிக்கு முதல் வெற்றியாக அமைந்தது. இந்த தருணத்தில்ம் தோனி மீண்டும் கேப்டனாக வருவது, காயத்தால் விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டின் இடத்தை நிரப்புவதற்கு மட்டுமல்ல, அணியை ஒருங்கிக்க புதிய உத்வேகம் அளிப்பதற்கும் உதவும்.
அவரது தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை (2010, 2011, 2018, 2021, 2023) வென்றுள்ளது, மேலும் அவரது முன்னிலையில் ரசிகர்களின் ஆதரவு சேப்பாக்கத்தில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். ஆம்.,, தோனி CSK-வின் மிகப்பெரிய பலமாகவும், ரசிகர்களின் உணர்ச்சிகரமான ஆதரவுக்கு மையமாகவும் இருக்கிறார். அவரது அனுபவமும், அழுத்தமான சூழல்களில் அமைதியாக முடிவுகளை எடுக்கும் திறனும் அணிக்கு பெரும் பலம் என்றே சொல்லலாம். இன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.