CSKvsPBKS முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே..??
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 14 போட்டிகள் சென்னை அணியும், 9 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டி விளையாடி அதில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து தனது இரண்டாவது வெற்றிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.