பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியது, ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா.? அல்லது நடைபெறாமல் இருக்குமா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன எனவும், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித்தொடரை நடத்தலாமா..? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக சீன பொருட்களை தடை செய்ய வேண்டுமென்று குரல்கள் வலுத்து வருகின்றன .சீன நிறுவனங்களை புறக்கணிக்க ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியது, ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…