வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது. சண்டிகர் மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியிலாவது சிஎஸ்கே முழு திறனையும் காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளிலும் தலா 2ல் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இதில் சென்னை அணி, 5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு சீசனில் தொடர் தோல்வி அதன் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு சிஎஸ்கே அணி சென்றது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அதேநேரம், தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை சிஎஸ்கே ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இளம் வீரர்களை அணியில் சேர்க்காதது, அதிக எண்ணிக்கையிலான ஸ்பின்னர்களை கொண்டிருப்பது, ஹிட்டர்கள் யாரும் இல்லாதது என வீக்னஸ் பட்டியல் நீள்கிறது. இதனை சரி செய்தாலே அணி பழைய பார்முக்கு வந்து அனைவரையும் ஆட்டம் காணவைக்கும் என்று ரசிகர்களின் குமுறலாக இருக்கிறது. சரி இன்று இரவு என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தோனி என்ன செய்ய போகிறார்?
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த வருடம், விளையாடிய 4 இன்னிங்சில், 0*(2), 30*(16), 16*(11), 30*(26) சொல்லளவிலான ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால், அவரால் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியவில்லை என்றே ரசிகர்கள் வருந்துகிறார்கள். இதனால், கடைசி போட்டி முடிந்த பின், தோனி ஓய்வு குறித்து தகவல் பரவியது. ஆனால், அதற்கு தோனி அதிரடியாக சமாளித்திருந்தார். இன்றயை தினம் பழைய பார்மட்டை எடுத்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025