ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை அணியும, ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 46- வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு போட்டியாக 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
இந்த போட்டி இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டியாகும். முதல் 4 இடத்திற்காக அடித்து கொள்ளும் ஐபிஎல் அணிகளில் இந்த இரு அணிகளும் ஒன்று.
மேலும், இதே ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதும் பொழுது ஹைதராபாத் அணி சென்னை அணியை எளிதில் வெற்றி பெற்றது. அதனால் நடைபெறும் இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு திருப்பி கொடுக்கும் வகையில் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் 20 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 14 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 6 போட்டிகள் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இந்த நேருக்கு நேரை அதிகரிப்பதற்காக ஹைதராபாத் அணி இந்த போட்டியை கடுமையாக விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
சென்னை
ருதுராஜ் கெய்க்வாட் (c), ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி (wk), சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பத்திரனா.
ஹைதராபாத்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (wk), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (c), புவனேஷ்வர் குமார், ஜயதேவ் உணத்கட், நடராஜன்.
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…