KKR தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைக்குமா சென்னை ? சேப்பாக்கில் இன்று பலப்பரீட்சை ..!
![CSKvsKKR Preview [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/CSKvsKKR-Preview-file-image.webp)
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும் கொல்கத்தா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. தொடர் தோல்வியிலிருந்து வரும் சென்னை அணி தற்போது இந்த போட்டியில் வெற்றி பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இந்த தொடரில் இது வரை விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த போட்டியிலும் சென்னை அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் வருவதற்கு கொல்கத்தா அணி முனைப்புடன் இருப்பார்கள்.
கடந்த சென்னை அணி விளையாடிய போட்டியில் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் இல்லாத காரணத்தால் சென்னை அணி இந்த தொடரில் 2-வது தோல்வியை சந்தித்தது. மேலும், அன்றைய போட்டியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் வங்காளதேசத்திற்கு சென்றதால் அந்த போட்டியில் அவர் விளையாடாமல் இருந்தார். இன்று நடக்கும் இந்த போட்டியில் அவரும், அவருடன் பத்திரனாவும் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் தலா 29 முறை மோதியுள்ளது. அதில் 18 முறை சென்னை அணியும், 10 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. நேருக்கு நேர் அடிப்படையில் பார்க்கும் போது சென்னை அணி அதிக முறை வெற்றி பெற்றதால் இந்த போட்டியை சென்னை அணி வெற்றி பெரும் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கபடுகிறது.
எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் :
சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பத்திரனா.
கொல்கத்தா அணி
பிலிப் சால்ட்( விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025