தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் இதுவரை 5 போட்டிகள் மோதியுள்ள நிலையில் 3 முறை லக்னோ அணி வெற்றிபெற்றுள்ளது.

CSK WON THE TOSS

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த சீசனில் இதுவரை சென்னை அணி 6 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அதில் 1 போட்டியில் மட்டும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான பார்மில் இருக்கிறது.

அதே சமயம் லக்னோ அணி 6 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில்  4-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதால் அணி வெற்றிபெற்று பழைய பார்முக்கு திரும்பும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்து காத்துள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள் 

சென்னை : ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(w/c), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

லக்னோ : ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட்(w/c), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி

சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அஸ்வின் மற்றும் கான்வேக்கு பதிலாக ஓவர்டன் மற்றும் ரஷீத் ஆகியோர் களமிறங்குகிறார்கள். அதைப்போல, லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் திரும்பியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்