ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக குஜராத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மதியம் 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த இரண்டு அணிகளிலும் சந்தித்து கொள்கின்றன இதனால் இந்த போட்டிக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது,
மேலும், இந்த தொடரில் பெங்களூரு அணி ஓரளவுக்கு வெளியேறி விட்டனர் என்பது தான் உண்மை. ஆனால், இனி இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அது ப்ளே ஆஃப் சுற்றுக்கு சண்டையிடும் அணிகளுக்கு பெரிய நெருக்கடியாக வந்துவிடும். இதனால் இந்த நெருக்கடியை பெங்களூரு அணி உருவாக்குவதற்கு விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த 3 போட்டிகளில் 2 போட்டிகள் குஜராத் அணியும், 1 போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெல்வதற்கு கடிமாக போராடுவார்கள் என்று தெரிகிறது.
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா
பெங்களூரு அணி வீரர்கள் :
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…