பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!
பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் இதுவரை 34 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், 18 போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றுள்ளது.

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் : பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வ), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
பெங்களூர் : பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார்(கேட்ச்), ஜிதேஷ் சர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
இந்த சீசன் இதுவரை இந்த இரண்டு அணிகளும் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு செம பார்மில் இருப்பதால் போட்டியின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி 7 போட்டிகள் விளையாடி அதில் 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்திலும், பெங்களூர் அணி 7 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 5-வது இடத்திலும் இருக்கிறது. இதில் கடைசியாக பெங்களூர் அணி பஞ்சாப் அணியுடன் தான் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இன்று களம் காண்கிறது.