இந்தியா பந்து வீச முடிவு ..! ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்யுமா..கோலி படை…?
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் :
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், தீபக் சாஹர், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் :
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மத்தேயு வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், டி ஆர்சி ஷார்ட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. டி-20 தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி-20 தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.