AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

ஆஸ்ரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

AUS VS ENG CT 25

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி  லாகூரில் இருக்கும் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.30 க்கு போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு டாஸ் போடப்பட்டது.

அதன்படி, டாஸ் வென்ற அணி ஆஸ்ரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள் விவரம் 

ஆஸ்ரேலியா :மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்

இங்கிலாந்து :பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித்(w), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(c), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்

மேலும், இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் 160 முறை மோதியுள்ளது. அதில் 90 முறை ஆஸ்ரேலியா அணியும், 65 முறை இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. அதிகமுறை ஆஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இந்த போட்டியிலும் அந்த வெற்றி எண்ணிக்கையை தொடரும் நோக்கில் விளையாடுகிறது.

இருப்பினும், ஆஸ்ரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லை என்பது அணிக்கு ஒரு பின்னடைவான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்களை போல முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்த போட்டியில் விளையாடி ஆஸ்ரேலியா அணி வெற்றிபெறுமா அல்லது இங்கிலாந்து அதிரடியான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்