dhoni and sakshi [file image]
ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான்.
சென்னை அணி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் விரும்பி ஆவலுடன் காத்திருக்கும் ஒரு விஷயம் என்றால் தோனி பேட்டிங் செய்ய வருவது பற்றி தான். பல போட்டிகளில் அவர்களுடைய ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது. ஆனால், நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கி சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
தோனி போட்டியில் களமிறங்கியவுடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி….தோனி என கரகோஷமிட்டனர். நேற்று நடந்த இந்த போட்டியில் தோனி 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தமாக 37 ரன்கள் அடித்தார். இருப்பினும் போட்டியில் சென்னை அணியால் வெற்றிபெறமுடியவில்லை. இருந்தாலும் தோனியின் சிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை கண்டு கழித்து சென்றார்கள்.
அப்படி தான் தோனியின் மனைவி சாக்ஷியும் கூட தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்துவிட்டு போட்டியில் தோல்வி அடைந்ததையே மறந்துள்ளார். தோனியை ஆடியதை பார்த்த சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டோம்” என கூறியுள்ளார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…