இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்றாம் டி-20 போட்டி, இலங்கையில் உள்ள குலிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா – நிசாங்கா களமிறங்கினார்கள். தொடக்கத்தில் சற்று சொதப்பிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாங்காமல் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் மட்டுமே அடித்தது. இதில் அதிகபட்சமாக சந்திமால் 54 ரன்களும், பண்டாரா 44 ரன்கள் அடித்தனர்.
132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸ் – ஏவின் லீவிஸ் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆடி வந்து, 19 ஆம் ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்து டி-20 தொடரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…