WI vs ENG : 115 மீ.. தூரத்திற்கு பந்தை பறக்க விட்ட பட்லர்! சூடுபிடிக்கப் போகும் ஐபிஎல் ஏலம்!

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Butler Six

பார்படாஸ் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் நேற்று 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டனான பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் பெற்று தொடரிலும் 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது, சூழல் பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியின் பந்தை இறங்கி வந்து ஜாஸ் பட்லர் சிக்ஸர் அடித்தார். ஆனால், ஒரு சாதாரண சிக்ஸராக இல்லாமல் அந்த பந்தை மைதானத்தின் கூரைக்கு அடித்திருப்பார். சுமார் 115 மீ. தூரம் அந்த பந்தை சிக்ஸர் அடித்து பவுலர் உட்பட எதிரணியை மிரள வைத்திருப்பார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த சிக்சருக்கு பிறகு ஆக்ரோஷமாக விளையாடிய ஜாஸ் பட்லர் 45 பந்துக்கு 83 ரன்கள் எடுத்து போட்டியைத் திசை திருப்பி இருப்பார். அவர் அடித்த அந்த 115மீ. சிக்சருக்கு பிறகு தான் போட்டி சூடு பிடிக்கவே தொடங்கி இருக்கும். மேலும், டி20 போட்டிகளில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் 8-வது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடந்த முதல் டி20 போட்டி உட்பட அதற்கு முன்னதாக நடந்த ஒரு சில முக்கியப் போட்டிகளிலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடவில்லை. இதனால், அவர் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. இதன் விளைவாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளார்.

தற்போது, இந்த விளையாட்டின் மூலம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இவருக்கென போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதை இந்த விளையாட்டின் மூலம் சொல்லியிருக்கிறார். அதன்படி, நடைபெற இருக்கும் இந்த மெகா ஏலத்தில் இவரை அணியின் எடுக்கப் போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்