உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர். இதில் மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது.
அஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்ற இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இதில் தமிழகத்தை சார்ந்த 2 முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் டி.என்.பி.எல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
unknown node