2007 டி-20 உலக கோப்பையில் சச்சின், கங்குலி பங்கேற்காததற்கு இவர் தான் காரணமாம்.!

Default Image

2007 ஆம் ஆண்டு டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும், டிராவிட் தான் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை டி20 உலக கோப்பை முதன் முதலாக 2007ஆம் ஆண்டு நடைபெற்றபோது, இந்திய அணியானது மூத்த வீரர்களை தவிர்த்து இளம் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை கொண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று அசத்தியது.

அதுவும், அப்போதைய பலம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இறுதி போட்டியில் வென்று சாதனை படைத்தது.

இந்த போட்டியில் மூத்த நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோரை தவிர்த்து இளம் வீரர்களான ரோஹித் சர்மா, ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ஜோகிந்தர் சர்மா என இளம் வீரர்களை கேப்டன் தோனி தேர்ந்தெடுத்தார்.

2007 டி-20 போட்டியில் சச்சின், கங்குலி பங்கேற்காததற்கு டிராவிட் தான் காரணம் அவர் தான் டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்