பிராவோவிற்கு பதில் ஜடேஜா ஏன்??? களத்தை மாற்றிய கடைசி ஓவர்!?

Default Image

ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் 180 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய டெல்லி வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

டெல்லி 19.5 ஓவரிலேயே இலக்கை அடைந்தது.குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் டெல்லி தேவைப்பட்டது.அந்த கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த முடிவே நேற்றை போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றிப்போட்டது.கடைசி ஓவரில் டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

இவருடைய அதிரடியால் டெல்லி குறிப்பிட்ட ஓவர்க்குள் இலக்கை எட்டிபிடித்தது.

சென்னை தோல்வியை தழுவியது.ஆனால் இந்த போட்டி சென்னை வெற்றி பெற சாதகமாக இருந்தபோதும் தோல்வி அடைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்ச்சையான கடைசி ஓவர் குறித்து போட்டிக்கு பின் பேசிய தோனி பிராவோ உடல் தகுதியுடன் இல்லை.அதனால் தான் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை.அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன் இருந்தது.

ஒன்று கரண் ஷர்மா அல்லது ஜடேஜா.இதில் ஜடேஜாவை தேர்வு செய்தேன் அது போதுமானதாக தெரியவில்லை ஷிகரின் விக்கெட் மிகவும் முக்கியமானது.சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம்.

தவான் எப்போதும் நல்ல ஸ்டிரைக் ரேட் நோக்கி செல்வார்.எனவே அவரது விக்கெட் மிக முக்கியம்.முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல வேறுபாடு இருந்தது.

இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சிறுது ஏதுவாக இருந்தது.எது எப்படி இருந்தாலும் தவான் சிறப்பாகவே விளையாடினார்.டெல்லி அணி போட்டியில் சென்னை தோல்வியடைந்ததால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்