தோனி ,எனக்காக ஏன் அங்கு ஒரு பீல்டரை வைக்கக்கூடாது? பீட்டர்சன் நக்கல் ட்வீட்
தோனி ,எனக்காக ஏன் அங்கு ஒரு பீல்டரை வைக்கக்கூடாது? என்று பீட்டர்சன் நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.அன்மைக்காலமாக ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.ஆனால் அது குறித்து அவர் எந்த கருத்தும் கூறவில்லை.சரி ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் களமிறங்கி திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிக்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி கீப்பிங் செய்ய அவர் பேட்டிங் செய்யும் போட்டோவுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது ஏய், எம்.எஸ்.டி, எனக்காக ஏன் அங்கு ஒரு பீல்டரை வைக்கக்கூடாது? உங்களுக்கு எதிராக ரன்கள் எடுப்பது மிகவும் எளிதானது என்று பதிவிட்டுள்ளார்.
“Hey, MSD, why don’t you put a fielder over there for me? Scoring runs against you guys is so easy…!”???? pic.twitter.com/OKVukkkSQD
— Kevin Pietersen???? (@KP24) April 18, 2020