ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேரில் மிச்சேலை அணியில் எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்- 22 தேதி தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் சிவம் துபேவும், ருதுராஜ் கெய்க்வாடும் தான். இருவரும் பொறுமையாகவும் அதே நேரத்தில் அதிரடி காட்டியும் விளையாடினார்கள்.
இருவரின் அதிரடியில் சென்னை அணி 160 ரன்களை கடந்த போது ருதுராஜ் அவரது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு டேரில் மிட்செல் களமிறங்கினார். அவர் இறங்கியது முதல் ஒரு டி20 போட்டியை விளையாடுவது போல அல்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல தட்டி தட்டி சிங்கிள்ஸ் எடுத்து விளையாடினார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு எரிச்சலேயே ஏற்படுத்தியது. அவர் களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி இருந்தால் சிஎஸ்கே அணி 230 மேல் ரன்களை சேர்த்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மெதுவான ஆட்டத்தால் சென்னை அணியின் ரன் ரேட் படிப்படியாக சரிந்தது. இது இந்த ஒரு போட்டியில் இப்படி இவர் விளையாடாமல் இருந்தால் கூட பரவாயில்லை. இது வரை விளையாடிய 5 போட்டிகளிலும் அவர் மெதுவாகவே விளையாடுகிறார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சுட்டிகாட்டி பேசி வருகின்றனர். டேரில் மிட்செலை இந்த ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி எடுத்த போது பெரிதும் எதிர்ப்பார்க்கபட்டார். கடந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்தார் என்பதற்காகவே இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்டார்.
இதனால் இவரை சென்னை அணியில் 14 கோடி ரூபாய் கொடுத்து ராயுடுவுக்கு மாற்று வீரராக எடுத்தார்கள். ஆனால் இது வரை விளையாடிய எந்த ஒரு போட்டியிலும் ஒரு அதிரடி ஆட்டத்தை கூட அவர் வெளிப்படுத்தவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியிலும் இவர் 14 பந்துக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும்.
இதனால், சரிவர விளையாடாத இந்த வீரருக்கு தொடர்ந்து ஏன் வாய்ப்புகள் கொடுக்குறீரகள் எனவும் ரிஸ்வி, தோனி போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும் போது இவரை ஏன் கடைசி ஓவர்களில் களமிறக்குறீர்கள் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…