இவரை எதுக்கு 23 கோடிக்கு எடுத்தீங்க? வெங்கடேஷ் ஐயருக்கு பயத்தை காட்டிய க்ருனால் பாண்டியா!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த காரணத்தால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா அணி 23.75 கோடி கொடுத்து இந்த முறை தக்க வைத்து கொண்டது. எனவே, அவர் இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில், வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 7 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங் இன்னிங்ஸின் போது 13-வது ஓவரை பெங்களூர் அணியின் சுழற்பந்துவீச்சாளர் க்ருனால் பாண்டியா வீச வந்தார். முதல் பந்திலே பவுன்சர் அவரை விட உயரமாக போட்டு வெங்கடேஷ் ஐயரை பயம் காட்டினார். பிறகு அந்த பந்து வைட் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்த பந்தில் பாண்டியா வெங்கடேஷ் ஐயரை போல்ட் எடுத்தார். சோகத்துடன் கலந்த கோபத்தில் வெங்கடேஷ் ஐயர் பெவிலியனுக்கும் திரும்பி சென்றார்.
வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்த உடனே சமூக வலைத்தளங்களில் வெங்கடேஷ் ஐயர் தனது 23.75 கோடி விலைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை என்கிற விமர்சனமும்..இவரை எதுக்குங்க இவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுத்தீங்க எனவும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
KKR spent 23 crore on Venkatesh Iyer to score 6 runs 😭😭 #ipl2025 #KKRvsRCB
— ✨ (@KxipFanatic) March 22, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025