ஜெர்சி எண்ணாக 7 நம்பரை தேர்ந்தெடுத்ததில் மூடநம்பிக்கை இல்லை என முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடங்கி, ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை டோனியின் ஜெர்சி எண் ஏழாக உள்ளது. இந்த 7-ஆம் நம்பர் தோனிக்கு ரசியானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டார் தோனி. அப்போது, ரசிகர்களுடனான உரையாடலின்போது தான் ஏழாவது மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி பிறந்ததால், 7-ஐ தேர்வு செய்தேன் என தோனி தெரிவித்தார். இது ராசியானது என பலர் கூறியபோதிலும், இதுபோன்ற மூடநம்பிக்கை தனக்கு இல்லை எனவும் விளக்கமளித்தார். அதேநேரம் இந்த எண் தனது இதயத்துக்கு நெருக்கமானது என்றும் தோனி தெரிவித்தார்.
இதனிடையே, 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அப்போதில் இருந்து அவரது ஜெர்சி நம்பர் 7 தான். ஆரம்பக்காலத்தில் அனைவரும் 7 எனது அதிர்ஷ்ட எண் என்றுதான் நினைத்தனர். ஆனால் நான் மிக எளிய காரணத்திற்காகத்தான் 7ஐ தேர்வு செய்தேன் என்று கூறினார். பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டுக்காக அபாரமான பங்களிப்பை செய்த தோனி, ஐபிஎல்-லிலும் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…