ஸ்மித்தை நோக்கி பந்தை ஏன் எறிந்தேன்… சிராஜ் கூறிய பதில்.!

Siraj smith

ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்ததற்கு, அது விளையாட்டில் ஒரு பகுதி என  சிராஜ் கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி விரைவாக இழந்தாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் பொறுப்புடன் விளையாடி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

இதில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் நேற்று  பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சிராஜ் பவுலிங் செய்ய வரும்போது, மைதானத்தின் ஸ்பைடர் கேமராவால் கவனம் சிதறிய ஸ்மித் பேட்டிங்கில் இருந்து விலகினார். இதையடுத்து கோபத்தில் சிராஜ் பந்தை ஸ்மித்தை நோக்கி வீசினார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

இது குறித்து பதில் அளித்த சிராஜ், ஆட்டத்தில் இது போன்று நடைபெறுவது இயல்பு, ஆட்டத்தில் நம்மை அவ்வப்போது புத்துணர்வாக வைப்பதற்கு இவ்வாறு நடந்து கொண்டால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும். நாங்கள் களத்தில் நீண்ட நேரம் விளையாடினோம், அதேநேரம் நான் விக்கெட் விழாத விரக்தியில் இருந்ததாகவும் ஒத்துக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records