பெங்களூருடனான போட்டியில் தோனி கைகுலுக்காமல் செல்ல காரணம் என்ன? பின்னணி இதுதானா ?

RCB Celebration

சென்னை : பெங்களூரு அணியுடனான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்த பிறகு ‘தல’ தோனி ஆர்சிபி அணி வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றுவிட்டார் என சர்ச்சை ஒன்று எழுந்த நிலையில் அதன் உண்மை சம்பவம் இதுதான் என ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த மே 18-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என பல்வேறு சிக்கல்களுடன் இந்த போட்டியானது தொடங்கியது. அதனை தொடர்ந்து நடந்து முடிந்த இந்த போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் எம்.எஸ்.தோனி தோல்வியியை தாங்க முடியாமலும், ஆர்சிபி வீரர்களை அவமதித்து விட்டதாலும் தான் பெங்களூரு அணிக்கு கை குலுக்காமல் சென்று விட்டார் என வீடியோவுடன் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலரும் கூறி இணையத்தில் ஒரு சர்ச்சை வெளியானது. ஆனால், இந்த போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே ரசிகர்கள் கைகுலுக்கி கொள்ள வரிசையால் நின்று கொண்டுருப்பார்கள் அதில் முதல் ஆளாக தோனியும் நின்று கொண்டிருப்பார்.

ஆனால், மைதானத்தில் மத்தியில் ஆர்சிபி ரசிகர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடி கொண்டு இருப்பார்கள். பொதுவாக ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு 1 நிமிடம் இந்த கொண்டாட்டம் இருக்கும் ஆனால் ஆர்சிபி அணி 3 நிமிடங்களுக்கு மேலாகியும் கை குலுக்க நின்று கொண்டிருக்கும் சிஎஸ்கே வீரர்களை கண்டுக்கொள்ளாமல் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். சிறுது நேரம் கழித்து முதல் ஆளாக நின்று கொண்டிருந்த எம்.எஸ்.தோனி ஓய்வு அறைக்கு நடந்து செல்வார்.

இதற்கு காரணமாக பல ரசிகர்கள் அவர் தோல்வியியை தாங்க முடியாமலும், ஆர்சிபி வீரர்களை அவமதித்து விட்டதாலும் தான் அவர் ஓய்வு அறைக்கு சென்றார் என சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால், சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையிலில் என்ன கூறுகிறார்கள் என்றால், தோனிக்கு முழங்காலில் காயம் இருப்பதால் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அவர் அதற்கான முதலுதவி சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்.

நடந்த இந்த போட்டியில் கடைசி ஓவரில் தான் தோனி அவுட் ஆகி இருந்ததால் அதனால் போட்டி முடிந்த பின் முதல் ஆளாக கைகுலுக்கி முடித்து விட்டு தனக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம் என அவர் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், பெங்களூரு அணி வீரர்கள் வெற்றியின் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்ததால். மைதானத்தில் நின்று கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆர்சிபி வீரர்கள் யாரும் கைகுலுக்க வரவில்லை.

இதனால் தோனி தனது காயத்திற்கான முதலுதவி செய்யவே அவர் ஓய்வறைக்கு சென்றார் என வெளியான தகவலில் தெரிகிறது. இதுதான் அவர் ஓய்வு அறைக்கு சென்ற உண்மையான பின்னணி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இருந்தாலும் கூட அவர் போகும் போதும் சக ஆர்சிபி அணியின் சக வீரர்களுக்கும் கை குலுக்கி விட்டு தான் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்