BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணி அனைவரும் எதிர்ப்பார்க்கபட்டது போல இருந்தாலும் ஒரு சில மாற்றங்களை விமர்சித்து ரசிகர்கள் இணையத்தில் பிசிசிஐயிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியில் ஸுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இவர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 146.79 ஸ்ட்ரைக் ரேட்டில் 298 ரன்கள் எடுத்து அதிலும் 42.57 சராசரியில் விளையாடி வருகிறார். ஆனால் ருதுராஜ் 9 போட்டிகளில் விளையாடி 149.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 447 ரன்களை எடுத்து 63.85 சராசரியில் விளையாடி வருகிறார்.
இதனை கருத்தில் கொண்டு கில்லை ஏன் இந்திய அணியில் எடுக்க வேண்டும்? என்றும் ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை ?என்றும் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான எகனாமியில் பந்து வீசிய நடராஜன் இடம்பெறவில்லை ஆனால் அவருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே நேரம் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக பந்து வீச வில்லை ஆனால் அவரை அணியில் எடுத்துள்ளனர் ஆனால் அவருக்கு பதிலாக சந்தீப் ஷர்மாவை அணியில் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும், குறிப்பாக நன்றாக விளையாடி வரும் ருதுராஜை எடுக்காததான் காரணத்தை விலகுமாறு பிசிசிஐக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…