தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருப்பதன் காரணம் ?

Published by
Castro Murugan

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.முதல் நாளான இன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுதான் இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

டுட்டு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஆளுமை நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர். ஆப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனப் பிரிவினை மற்றும் பாகுபாடு கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.அவரது முயற்சிகளுக்காக, டுட்டுவுக்கு 1984 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இன்று அவர் தனது 90 வது வயதில் காலமானார்.

இது பற்றி ஜனாதிபதி ரமபோசா கூறுகையில் , டுட்டு “ஒரு ஆன்மீக சின்னம், நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் மற்றும் உலகளாவிய மனித உரிமைப் பிரச்சாரகர் ஆவார். சமமற்ற தேசபக்தர்; கிரியைகள் இல்லாத விசுவாசம் இறந்துவிட்டது என்ற விவிலிய நுண்ணறிவுக்கு அர்த்தம் கொடுத்த கொள்கை மற்றும் நடைமுறைவாதத்தின் தலைவர்” என்று புகழ்ந்துள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 46 ரன்களுடனும் ,கேஎல் ராகுல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இந்திய அணி விக்கெட் இழப்பின்றி உணவு இடைவெளிக்கு  முன்னர் வரை 83 ரன்களை எடுத்துள்ளது.

 

Published by
Castro Murugan

Recent Posts

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

26 minutes ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

1 hour ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

1 hour ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

14 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

15 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

16 hours ago