கடைசிநாள் ஆட்டம் வெற்றி யாருக்கு..? இரு அணிக்கும் வாய்ப்பு….!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் கடைசிநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது . முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னின்னிஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆட்டம் ஆரம்பத்திலிருந்து விக்கெட்டை இழக்க தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் முகமது ஷமி 5, பும்ரா, ஷர்துல் தாக்கூர் தலா 2 வீழ்த்தினர். பின்னர், இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 130 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
305 ரன்கள் இலக்குடன் நேற்று மீதம் இருந்த நேரத்தில் தனது 2-வது இன்னிங்ஸை தென்னாபிரிக்கா அணி தொடங்கியது. நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா 94 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந்தது. நிதானமாக விளையாடிய டீன் எல்கர் அரைசதம் விளாசி 52* ரன் எடுத்து களத்தில் உள்ளார். இந்நிலையில், இன்றைய கடைசி நாளில் ஆட்டத்தில் இன்னும் 211 ரன்கள் அடித்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும்.
அதே நேரத்தில் இந்திய அணி மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் இன்றைய ஆட்டத்திற்குள் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால், இன்றைய கடைசிநாள் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.