வெற்றி யாருக்கு..? இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி.!
இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி இந்த சீசன் முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இந்த சீசனில் இது தான் முதல் போட்டி. எனவே முதல் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. அதைபோல், குஜராத் அணியும் இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்திற்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் இருக்கிறது.
இதற்கு முன்பு குஜராத் அணியும் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியதில் குஜராத் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை பார்பதற்காக ரிஷபந்த் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.