ஐபிஎல் 2024 : இன்றைய போட்டியின் வெற்றி யாருக்கு ? ஹைதராபாத்தை தாக்கு பிடிக்குமா பஞ்சாப் ?

PBKSvsSRH [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில், தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன இந்த போட்டியில் வெற்றி பெறும் மணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் முன்னேறுவர்கள். இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளும் முனைப்புடன் செயல்படுவார்கள் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது அதில் 14 முறை ஹைதராபாத் அணியும் 7 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நேருக்கு நேர் போட்டிகளில் அதிக முறை ஹைதராபாத் அணி வெற்றி கொண்டிருப்பதால் இந்த போட்டியிலும் ஹைதராபாத் அணியை வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் :

பஞ்சாப் அணி வீரர்கள்

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ஹைதராபாத் அணி வீரர்கள்

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்