உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..வெல்லப்போவது யார்..? இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதல்..!

INDvsAUS wtc 23

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல்முறையாக  டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

2021-23 காலகட்டத்திற்குள் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 152 புள்ளிகளுடன் (66.67%) முதல் இடமும், இந்திய அணி 127 புள்ளிகளுடன் (58.8%) இரண்டாவது இடமும் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்திய அணிக்கு இது 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் டே:

இந்த இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கிட்டால், போட்டி குறிப்பிட்ட 5 நாட்களில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அதனை ஈடு செய்ய ஜூன் 12ம் தேதி ரிசர்வ் டே ஆக வழங்கப்படும். ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தாலோ, ஆட்டமே நடைபெறாமல் தடை பட்டாலோ இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு அணிகளும் சேர்ந்து கோப்பையை பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்படும்.

இந்த இறுதிப்போட்டி பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கான வீரர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி(முழு விவரம்):

ரோகித் சர்மா (C), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக்ட், உமேஷ் யாதவ்.

ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய அணி(முழு விவரம்):

பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சன், நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

ரிசர்வ் வீரர்கள்: மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்