சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

IPLFINAL CSKvsGT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெரும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதல்.

ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்காக இரு அணிகளும் லீக் மற்றும் தகுதி சுற்றுப்போட்டிகளில் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தோனி தலைமையிலான சென்னை அணி 14 லீக் போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதல் தகுதி சுற்றுப் போட்டியில் குஜராத் அணியை வென்று நேரடியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. மறுபுறம் குஜராத் அணி 14 லீக் போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. முதல் தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை அணியை வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நடப்பு ஐபிஎலில் இந்த இரு அணிகளும் மொத்தம் 4 ஆட்டங்களில் நேருக்குநேர் விளையாடி உள்ளன. இதில் குஜராத் 3 போட்டியிலும், சென்னை அணி 1 போட்டியிலும் வென்றுள்ளது. போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதால் குஜராத் அணிக்கு இது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இப்போட்டியில் சென்னை அணி முழு முனைப்போடு போராடி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளுக்கான உத்தேச வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (Probable 11):

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (C&W), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா

குஜராத் டைட்டன்ஸ் (Probable 11):

விருத்திமான் சாஹா(W), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, மோகித் சர்மா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்