சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ இருந்து வருகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ தங்களது X தளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையோடு அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தமானது நீடித்துள்ளது.
அதனால் வருகிற ஜூன் மாதத்தோடு அவரது ஒப்பந்தம் முடிவடையுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரின் தேடலுக்கான வேலையை தற்போது பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதனால் இந்த பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற மே 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், மேலும் குறைந்தபட்சம் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது இல்லை என்றால் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஏதேனும் ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தலைமை பயிற்சியாளராக செயலாற்றிருக்க வேண்டும் என இது போன்ற சில நிபந்தனைகளையும் பிசிசிஐ விதித்துள்ளது.
இவை எல்லாம் தாண்டி விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்படுவோர் அடுத்தபடியாக நேர்காணல் மூலம் தேர்வாவர்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காக நியமிக்கபடுவோர் வருகிற ஜூலை-1ம் தேதி முதல் பொறுப்பேற்ப்பார்கள் எனவும் மேலும் அவரது பதவிக்கலாம் வருகிற 2027 ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…