கங்குலிக்கு பிறகு அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ரோஜர் பின்னி தேர்வாக அதிக வாய்ப்பு!!

Default Image

பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிசிசிஐ இன் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் கங்குலி, பிசிசிஐ இன் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிசிசிஐ இன் தலைவராக ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ இன் தலைவர் பதவி தேர்தலில் கங்குலி பங்கேற்கமாட்டார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம்பெற்றிருந்தார்.

முதல் சுற்று கூட்டம் முக்கிய தலைவர்கள் மத்தியில் நடைபெற்றது, அதில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவரை அந்தந்த மாநிலம் தலைவர் பதவி தேர்தலுக்கு முன்னிறுத்தும் என்றும் அடுத்த சுற்று கூட்டம் அடுத்த வரம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கபட்டது.

2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற கங்குலி, சிறப்பாகவே இந்திய நிர்வாகத்தை வழி நடத்திச் சென்றார். கங்குலி இது குறித்து பேசும் போது, நான் பதவியேற்ற போது  இந்த தலைவர் பதவி ஒரு சவால் நிறைந்ததாகவே இருந்தது, மேலும் நான், நேர்மையான மற்றும் நம்பிக்கை மிக்கதாகவே இந்த நிர்வாகத்தை நடத்த விரும்பினேன்.

கொரோனா தோற்று காலத்திலும் ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய கங்குலி, கொரோனா காரணமாக 2 வருடங்களுக்குப்பின் ரஞ்சி கோப்பை தொடரையும் நல்ல முறையில் நடத்தினார். விரைவாகவே பிசிசிஐ, அதன் தலைவர், துணை தலைவர், மற்றும் செகரட்டரி பதவிகளுக்கான தேர்தலை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்