சாகித் அஃப்ரிடிக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா..?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடிக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் கேட்டு வந்தனர் அதில் ஒரு ரசிகர் தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்டதற்கு சாகித் அப்ரிடி கூறியது என்னைப்பொறுத்த வரை தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறினார், மேலும் மற்றோரு ரசிகர் அவரிடம் உங்களுக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டதற்கு விராட் கோலி ரோஹித் சர்மா என்று கூறியுள்ளார்.
#AskAfridi favorite batsman from INDIA?
— harikp (@harifedal) July 29, 2020